விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்

சென்னை: லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம், ‘ககன மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில், ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள். வழக்கமான மிஸ்ட்ரி கிரைம் திரில்லர் மாதிரி இல்லாமல், புதுவிதமான கதாபாத்திரங்கள் மற்றும் தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான விஷூவல் எபெக்ட்ஸ் அம்சங்களுடன் இப்படம் விறுவிறுப்பான டிடெக்டிவ் ஸ்டோரியாக இருக்கும். அண்டர்வாட்டர் காட்சிகள் முக்கிய அம்சமாக இருக்கும். இக்காட்சிகள் மும்பையில் படமானது. விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். முக்கிய வேடங்களில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, ‘மகாநதி’ சங்கர், பிரிகிடா, வினோத் சாகர், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, நடராஜன் நடிக்கின்றனர். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் பால் எடிட்டிங் செய்கிறார்.

The post விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: