சென்னை: தமிழ் த்ரில்லரான ‘உன் பார்வையில்’ சமீபத்தில் டப்ளினில் நடைபெற்ற அயர்லாந்தின் இந்திய திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. ‘தால்’ மற்றும் ‘கஹோ நா பியார் ஹை’ புகழ் பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கிய இந்த படத்தில் பார்வதி நாயர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், அவரது அசாதாரண நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்.
‘உன் பார்வையில் சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் உணர்ச்சிகரமான நாடகத்தின் தனித்துவமான கலவையாகும்’ என்று பார்வதி நாயர் கூறினார். ‘‘பவ்யா மற்றும் திவ்யா ஆகிய இரு வேடங்களில் நடிப்பது சவாலான மற்றும் பலனளிக்கும் அனுபவமாக இருந்தது. இதில் இருவரும் சகோதரிகள். பவ்யா பார்வையற்ற பெண். அவளது முடிவு சோகத்தை தரும். அதற்கான காரணத்தை திவ்யா ஆராய்வதை சஸ்பென்ஸுடன் படம் சொல்லும்’’ என்றார் பார்வதி நாயர்.
The post பார்வதி நாயர் நடிக்கும் உன் பார்வையில் தமிழில் இயக்குனர் ஆனார் பாலிவுட் ஒளிப்பதிவாளர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.