இந்தநிலையில் ஆபாச வீடியோவை நீக்கக் கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு ஓவியா இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் கமிஷனர் இளங்கோ கடிதம் அனுப்பினார். அதன்படி தற்போது 3 ஆபாச வீடியோக்கள் எக்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ கூறியது: எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஹெலன் நெல்சன் (ஓவியா) இமெயில் மூலம் புகார் அனுப்பினார். தொடர்ந்து ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை மேற்கொண்டோம். இது தொடர்பாக எக்ஸ் இணையதளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது 3 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. சில ஆபாச இணையதளங்களிலும் வீடியோக்கள் உள்ளன. அதையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஓவியாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். அதன் பிறகே வழக்கு பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே தாரிக் என்ற நண்பருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவருடைய நட்பை துண்டித்ததால், அவர் தான் ஆபாச வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்றும் ஓவியா கூறியுள்ளார். தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
The post ஆபாச வீடியோ வெளியிட்ட ஆண் நண்பர்: நடிகை ஓவியா பரபரப்பு புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.