மோடியை விமர்சித்த சீனாவுக்கு பதிலடி

புதுடெல்லி: தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியை விமர்சித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புனித தலாய் லாமாவுக்கு  இன்று (நேற்று) தொலைபேசியில் 87வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய  நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்தனை  செய்கிறோம்,’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, ‘சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட திபெத் தொடர்பான பிரச்னைகளைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. இதற்கு நேற்று பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘தலாய் லாமாவை இந்தியாவில் விருந்தினராகக் கருதுவது அரசாங்கத்தின் நிலையான கொள்கையாகும். பிரதமர் கடந்த ஆண்டும் தலாய் லாமாவுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நாட்டில் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். அவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது,’ என்று தெரிவித்தார். …

The post மோடியை விமர்சித்த சீனாவுக்கு பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: