மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெரு மேடவாக்கம் பிரதான சந்திப்பு அருகே மாநகராட்சி தெரு விளக்கு மின் கம்பம் உள்ளது. இதன் அருகே நேற்று முன்தினம் இரவு குப்பை தொட்டியின் கீழே இருந்த உள்ள ஒட்டல் உணவு கழிவுகளை பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக பலியானது. இதுகுறித்து கால்நடை விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநில துணை தலைவர் நரசிம்மன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும், சென்னை மாநகராட்சி மின்பகிர்மான பிரிவிலும் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு பின் இறந்த பசுமாடு அங்கிருந்து அகற்றப்பட்டது. விசாரணையில், உள்ளகரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான பசு என்பது தெரியவந்தது. …

The post மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு appeared first on Dinakaran.

Related Stories: