ஹாலிவுட்டின் குரல் மன்னன் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் (93), நியூயார்க்கில் உள்ள டச்சஸ் கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் டார்த் வேடர் கதாபாத்திரம், 90களில் வெளியான ‘லயன் கிங்’ படங்களில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமானவர். இதனால் ஹாலிவுட்டின் குரல் மன்னன் என்றும் அவர் அழைக்கப்பட்டார். ‘தி சாண்ட்லாட்’ (1993) படத்தில் மிஸ்டர் மெர்ட்டலாகவும், ‘கம்மிங் டு அமெரிக்கா’ (1988) படத்தில் கிங் ஜாஃப் ஜோஃபராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஜேம்ஸ்.

கடந்த 2011ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஆஸ்கர் அகாடமி கௌரவித்தது. தொடர்ந்து இரண்டு எம்மி விருதுகள், ஒரு கோல்டன் குளோப், இரண்டு டோனி விருதுகள், ஒரு கிராமி, தேசிய கலைப் பதக்கம் மற்றும் கென்னடி சென்டர் ஹானர்ஸ் ஆகியவற்றையும் வென்றிருக்கிறார். ஜேம்ஸை கவுரவிக்கும் விதமாக, 2022ம் ஆண்டில், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரிலுள்ள கோர்ட் தியேட்டர், தி ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தியேட்டர் என்று பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஹாலிவுட்டின் குரல் மன்னன் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: