வருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா

வருசநாடு: வருசநாடு கிராமத்தில் உள்ள வேணிஅம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இதில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக பூஜை ,பூரண பிரதிஷ்டை, விநாயகர் பூஜை தீபாராதனை காட்டுதல், கோபுர கலசம் புனித தீர்த்தம் தெளித்தல், அன்னதானம் ,போன்ற நிகழ்ச்சியில் நடைபெற்றன.

இதில் வருசநாடு ஒக்கலிகர் மகாஜன சமுதாயத் தலைவர் வேணிராஜ் தலைமை வகித்து பேசினார், துணைத் தலைவர் கோபி, பொருளாளர் ராமு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இது நான்காவது கும்பாபிஷேக திருவிழாவாகும். இத்திருவிழாவில் வாலிப்பாறை, வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கண்டமனூர், சின்னமனூர், ஓடைப்பட்டி, கம்பம், திண்டுக்கல், மதுரை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: