ஃபிளை மீ டு த மூன் – திரைவிமர்சனம்

ஆப்பிள் ஸ்டூடியோஸ் மற்றும் தீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிரெக் பெர்லென்டி, இயக்கத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சன், சான்னிங் டாடம், ஜிம் ராஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஃபிளை மீ டு த மூன் ‘ ஹாலிவுட் படம். 1969ம் ஆண்டு ‘ அப்போலோ 11‘ மிஷனின் புதிதாக வேலைக்கு சேரும் மார்கெட்டிங் நிபுணர் கெல்லி ஜோன்ஸ் (ஸ்கார்லெட் ஜோஹான்சன்), அவருடன் மிஷன் லான்ச் இயக்குநர் கோல் (சான்னிங் டாடம்). சாதிக்கத் துடிக்கும் இளம் பெண் கெல்லி. ஏற்கனவே நடந்த மிஷனில் மூன்று விண்வெளி வீரர்கள் மரணம், மிஷன் தோல்வி என பல எதிர்மறை சவால்களைக் கொண்ட கோல் , இருவரும் இணைந்து அடுத்த மிஷனை மிகச் சரியாக கொடுத்தேத் தீர வேண்டும் என்கிற நெருக்கடியுடன் செயல்படுகிறார்கள். இவ்விருவருக்கும் இடையே நிகழும் கருத்து மோதல்கள், ஆண் – பெண் சமநிலை பிரச்னைகள் என செல்லும் கதை.

இடையே அமெரிக்காவின் நாசா விண்வெளியின் முந்தைய லான்ச்சில் உயிரிழப்பு, தோல்வி என பொதுமக்களுக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. ஒரு பக்கம் ரஷ்யாவுடனான போட்டிகள் என அமெரிக்கா நிரூபித்தேத் தீர வேண்டிய கட்டாயம் இந்த சிக்கலான சூழலில் சேரும் கெல்லி ஜோன்ஸ்க்கு மன ரீதியாகவும், வேலை ரீதியாகவும் பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இடையிலே கோல்ஸின் ஆண் அதிகாரி என்னும் தோரணை.ஆனால் ஒரு கட்டத்தில் கெல்லியின் புத்தி சாதுர்யம் கோல்ஸை விரும்பும் அளவுக்கு மாற்றி விடுகிறது. அப்போலோ 11‘ லான்ச்க்கு முன்பான போலி பயிற்சிகள், மற்றும் அதனை படமாக்கும் நிகழ்வுகள் என கதைக்களம் நம்மை 1969க்கே கொண்டு செல்கிறது. இவ்விருவரும் இணைந்து மிஷனை வெற்றிகரமாக முடித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

பல படங்களின் தன் நடிப்பால் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற நடிகை. இதெல்லாம் அசால்ட் என பல காட்சிகளில் பணியிடத்தின் நெருக்கடிகளையும் அதனை எப்படி சாதுர்யமாக தட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதை மிக ஸ்டைலாக காட்டி மனதில் இடம் பிடிக்கிறார் ஸ்கார்லெட் ஜோஹான்சன். அவருக்குப் பக்க பலமாக தோல்வி, நெருக்கடி, சிக்கலான சூழல், இதற்கிடையில் காதல், என மிரட்டுகிறார் சான்னிங் டாடம். காதல், காமெடி, ஆண்-பெண் சமநிலை என அனைத்தையும் பீரியாடிக் பாடமாகக் கொடுத்திருக்கிறார் கிரெக் பெர்லன்டி. டாரியஸ் வோல்ஸ்கியின் ஒளிப்பதிவு 1960களின் கால அமெரிக்காவை மிக அற்புதமாக காட்டியிருக்கிறது. உடன் பீரியட்டிக் இசையால் நம்மை கடத்துகிறார் டேனியல் பெம்பெர்டன்.

இப்போதும் இந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தக் கதை உண்மையா என்னும் கேள்வி எப்போதுமே நம் மனதில் இருப்பதால் கதைக்குள் உணர்வுப்பூர்வமகா இணைத்துக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் விண்வெளி சார்ந்த படங்கள் பிடிக்கும் என்னும் மக்கள் நிச்சயம் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம் இந்த ‘ ஃபிளை மீ டு த மூன்‘ படம்.

The post ஃபிளை மீ டு த மூன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: