கவினுக்கு ஜோடியாகும் அனுஷ்கா சர்மா உறவினர்

சென்னை: தமிழில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மாவின் உறவினர் நடிக்கிறார்.விராட் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் உறவினர் ருஹானி சர்மா என்று கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே தமிழில் 2017ல் வெளியான ‘கடைசி பென்ச் கார்த்திக்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அதற்குப் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். சிறிய இடைவெளி விட்டு, மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். ‘மாஸ்க்’ படத்தில் வில்லி கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்தை விக்ரனன் அசோகன் இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார்.

The post கவினுக்கு ஜோடியாகும் அனுஷ்கா சர்மா உறவினர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: