பிளாஸ்டிக் சர்ஜரி செய்த எமி ஜாக்சன்: ரசிகர்கள் அதிர்ச்சி

 

லண்டன்: கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் ஜார்ஜ் பனாயிட்டோ என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு முன்பே ஆண்ட்ரியஸ் என்ற ஆண் குழந்தைக்கு அம்மா ஆனார். பின்னர் ஜார்ஜுடன் பிரேக் கப் செய்த எமி, தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். விரைவில் இந்த தம்பதிக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்வில் தனது 4 வயது மகனுடன் எமி ஜாக்சன் கலந்து கொண்டு அசரவைத்தார். சமீபத்தில் இவர் தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்தார்.

அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. அதில் எமி ஜாக்சனின் முகத்தை பார்த்தவர்கள், இவர் எமி தானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம், இவரின் தற்போதைய முக மாற்றம் பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்க்கு காரணம் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதுதான். இதன் மூலம் தனது பழைய அழகையும் பொலிவையும் இழந்து அவர் காணப்படுகிறார். இது பற்றி நெட்டிசன்கள் கமென்ட்டில் கூறும்போது, ‘ஏஞ்சலினா ஜூலி போல ஆக ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். ஆனால் மைக்கேல் ஜாக்சனின் முக சாயலுக்கு மாறியுள்ளார்’ என்கிறார்கள்.

The post பிளாஸ்டிக் சர்ஜரி செய்த எமி ஜாக்சன்: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: