2025… 25ம் தேதி… 25வது படம்: விக்ரம் பிரபு மகிழ்ச்சி

சென்னை, டிச.22: வெற்றிமாறன் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், `சிறை’. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் மகன் எல்.கே.அக்‌ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். விக்ரம் பிரபு நடித்த `டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கிய தமிழ் கதை எழுதியுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது:
வரும் 25ம் தேதியன்று ‘சிறை’ படம் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் ‘சிறை’ போன்ற ஒரு படத்தில் நடித்தேன் என்பதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. ரியல் லோகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் கடினமாக உழைத்து படத்தை உருவாக்கினோம். போலீஸ் கேரக்டருக்காக 10 கிலோ வரை உடல் எடையை அதிகரித்தேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற எதிர்பார்ப்பு என்மீது இருந்தாலும், அதை ஒரு கடமையாக நினைத்து, வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறேன். இந்த 2025ம் ஆண்டில், எனது 25வது படம், 25ம் தேதி திரைக்கு வருகிறது என்பதுதான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனது தந்தை பிரபுவுடன் இணைந்து நடிக்கவும் காத்திருக்கிறேன்.

Related Stories: