ஆர்.எஸ்.கார்த்திக் நடிக்கும் கண்ணால் காண்பது பொய்

சென்னை: குமார் தட்சிணாமூர்த்தியின் காளிமுத்து எண்டர்பிரைசஸ் வழங்கும் படம், ‘கண்ணால் காண்பது பொய்’. சிவராஜ் பன்னீர்செல்வம், ஏ.தமிழ்ச் செல்வன் தயாரித்துள்ளனர். ‘பீச்சாங்கை’ பட ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக். காயத்ரி ரெமா, ஆனந்த் நாக், ஆர்.சாம், ஆராத்யா, ‘ராட்சசன்’ யாசர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை எழுதி மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கியுள்ளார். டி.எம்.உதயகுமார் இசையில் கபிலன், கே.ஜே.அய்யனார், ராஜா குருசாமி பாடல்கள் எழுதியுள்ளனர். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கே.கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அஜய் காளிமுத்து நடனப் பயிற்சி அளித்துள்ளார். எம்.எஸ்.நாத் எடிட்டிங் செய்ய, ஜி.என்.முருகன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஏ.ராஜா அரங்கம் அமைத்துள்ளார்.

Related Stories: