பேஸ்புக் விபரீதங்களை சொல்லும் ரகசிய சிநேகிதனே

சென்னை: பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, பிறகு அது ஏற்படுத்தும் விபரீதங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ரகசிய சிநேகிதனே’. வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்யராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சேகர் கன்னியப்பன் இயக்கியுள்ளார். புனிக புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லதா சேகர் தயாரிக்க, கே.பாக்யராஜ் செல்வகுமார் இணை இயக்கம் செய்துள்ளார். டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா இசை அமைக்க, சாம்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிரேசன் அரங்கம் அமைத்துள்ளார். டி.நாகராஜ், க.உதயமூர்த்தி எடிட்டிங் செய்துள்ளனர். பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் எம்.பி.இஸ்மாயில், தமிழகத்தில் வரும் 26ம் தேதி படத்தை வெளியிடுகிறார்.

Related Stories: