மாதிரவேளூர் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாள் கணபதி பூஜை, தனபூஜை, கோ பூஜை கணபதிஹோமம், நவக்கிரக ஹேமம் நடைபெற்றது. தொடர்ந்து முதல் காலயாக பூஜையை தொடர்ந்து நேற்று காலை நான்காம் காலயாக பூஜையும் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் பின்னர் சித்தி விநாயகர் கோபுர கும்பாபிஷேகமும் மூலவர் விமான கும்பாபிஷேகமும் பின்னர் மகா அபிஷேகமும் நடைபெற்று தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நடராஜ சுந்தர சிவாச்சாரியார், சுந்தரசிவாச்சாரியார், ஆசிரியர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாலகிருஷ்ணன், திருப்பணிக்குழுத் தலைவர் பாலு, சங்கர், அக்ரி சின்னதுரை மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: