திருச்செந்தூர் ஆவணித் திருவிழா : சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதிஉலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் 8ம்நாளை முன்னிட்டு நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தியில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது.

Advertising
Advertising

8ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில் திருக்கோயில் சேர்ந்தார். நாளை (8ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.

Related Stories: