உடல் எடை அதிகரித்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் நடித்துள்ள படம், ‘சைரன்’. அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள இப்படம், வரும் 16ம் தேதியன்று திரைக்கு வருகிறது. படம் குறித்து நிருபர்களிடம் சுஜாதா விஜய்குமார் கூறுகையில், ‘ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் இடையிலான போராட்டம்தான் படம். எப்போதுமே வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தும் ஜெயம் ரவி, இப்படத்திலும் வெவ்வேறு தோற்றங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது புரியும். கீர்த்தி சுரேஷுக்கு அவரது பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். 5 கிலோ உடல் எடை அதிகரித்து போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். எல்லா கதாபாத்திரங்களிலும், எல்லா மொழிகளிலும் அசத்தும் சமுத்திரக் கனி, இதிலும் மாறுபட்ட கேரக்டரில் தோன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க யோகி பாபு வருகிறார். அவரது நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்’ என்றார். அப்போது ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் குமார், அழகம்பெருமாள் மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

 

The post உடல் எடை அதிகரித்த கீர்த்தி சுரேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: