இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 23, சனி  

Advertising
Advertising

பெரியாழ்வார். சொக்கலிங்கப்புதூர் சிவாலயங்களில் வருஷாபிஷேகம்.  திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். தோளுக்கினியானில் பவனி. திருச்சானூர் தாயார் தெப்பம்.  திருச்செந்தூர் செந்திலாண்டவர் வருஷாபிஷேகம்.

ஜூன் 24, ஞாயிறு  

திருநெல்வேலி ஸ்ரீசுவாமி வெள்ளி யானை வாகனத்திலும்,  அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. கண்டதேவி சிவபெருமான் பவனி, திருமலை திருப்பதி ஜேஷ்டாபிஷேக ஆரம்பம். கும்பகோணம் ஆராவமுதன் கருட சேவை.

ஜூன் 25, திங்கள்  

பிரதோஷம். திருநெல்வேலி சுவாமி தந்தப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கில் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திரப் பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.

ஜூன் 26, செவ்வாய்  

சோழவந்தான் ஜனக மாரியம்மன் பாற்குடக் காட்சி. திருவஹிந்திரபுரம் ஜேஷ்டாபிஷேகம். ஹயக்ரீவர் தேசிகன் ஏகாஸன திருமஞ்சனம். கானாடுகாத்தான்,  கண்டதேவி சிவபெருமான் ரதோற்ஸவம்.

ஜூன் 27, புதன்  

பௌர்ணமி, காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. திருவண்ணாமலை கிரிவலம் இன்று காலை 9.30 முதல் நாளை பகல் 11.08 வரை.  திருச்சானூர் தெப்போற்சவம் முடிவு. திருநெல்வேலி நெல்லையப்பர் ரதோற்ஸவம். சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் புறப்பாடு.

ஜூன் 28, வியாழன்  

அருணகிரியார். மதுரை ஸ்ரீமீனாட்சி,  திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை. மதுராந்தகம் பெரிய பெருமாள் உற்சவம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணர் யானை வாகனத்திலும் தாயார் தண்டியலிலும் பவனி,

ஜூன் 29, வெள்ளி  

சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சார்யார் திருநட்சத்திரம். மதுராந்தகம் ராமர் திருத்தேர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

Related Stories: