‘கே.ஜி.எஃப்’ படங்களின் கதையும், ‘சலார்’ படத்தின் கதையும் வெவ்வேறு களத்தில் உருவாகியுள்ளது. எனவே, இப்படத்தில் இன்னொரு ‘கே.ஜி.எஃபை’ ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம். ‘சலார்’ கதை தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதற்கு தனியான உணர்வும், கேரக்டர்களும் உண்டு. பிரபாஸ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அப்பாவித்தனமும், ஆக்ரோஷமும் கலந்த தனித்துவமான கலவையை அவரிடம் பார்த்து வியந்த நான், அதையெல்லாம் இப்படத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன். கண்டிப்பாக ‘சலார்’ படம் ரசிகர்களுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இதில் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள், பிரபாசின் மாஸ் என்ட்ரி இடம்பெற்றிருந்தது.
The post சலார் டிரெய்லர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.