மாளவிகாவின் ‘ஹரோம் ஹரா’

ஸ்ரீசுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘ஹரோம் ஹரா’. சுதீர் பாபு அவரது ஜோடியாக மாளவிகா சர்மா நடிக்கின்றனர். மற்றும் சுனில், ஜெ.பி., அக்‌ஷரா கவுடா, லக்கி லஷ்மன், ரவிகாளே, அர்ஜூன் கவுடா நடிக்கின்றனர். ஞானசேகர் துவாரகா இயக்கும் இப்படத்தின் டீசரை பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் ஆகியோர் தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டனர். 1980 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது.

பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் நிலையில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கேரக்டரில் சுதீர் பாபு நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, சைத்தன் பரத்வாஜ் இசை அமைக்கிறார். சுமந்த் ஜி.நாயுடு தயாரிக்க, அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது.

The post மாளவிகாவின் ‘ஹரோம் ஹரா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: