நியூசிலாந்தில் ‘கண்ணப்பா’

விஷ்ணு மன்ச்சு நடிக்கும் வரலாற்றுக் காவியம், ‘கண்ணப்பா’. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நியூசிலாந்தில் எனது லட்சியப் படம் உருவாகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் ஆசீர்வாதம் எங்கள் குழுவுக்கு கிடைத்துள்ளது. கடந்த 8 மாதங்களாக இதன் முன்கட்டப் பணிகளில் கடுமையாகப் பணியாற்றினோம். 7 வருடங்களுக்கு முன்பு நடிகரும், எழுத்தாளருமான தணிகல பரணி இதன் கருப்பொருளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் , பர்ச்சூரி கோபாலகிருஷ்ணா, விஜேந்திர பிரசாத், தோட்டப்பள்ளி சாய்நாத், தோட்ட பிரசாத், இயக்குனர்கள் நாகேஸ்வர ரெட்டி, ஈஸ்வர் ரெட்டி போன்றோர் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

எங்கள் படத்துக்காக 600 பேர் கொண்ட குழுவினர் நியூசிலாந்தில் கடுமையாகப் பணியாற்றுகின்றனர். எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுத்த என் தந்தை மோகன் பாபுவுக்கு நன்றி. படத்தைப் பற்றிய எல்லா தகவலையும் அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார். இதில் சிவன் வேடத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post நியூசிலாந்தில் ‘கண்ணப்பா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: