மீனவர் கதையில் சாய் பல்லவி

நாகசைதன்யா நடிக்கும் பான் இந்தியா படத்தை சந்து மொண்டேட்டி இயக்குகிறார். இதை அல்லு அரவிந்த் வழங்கும் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’, மலையாள ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உள்பட சில படங்களை சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். தற்போது நாகசைதன்யா நடிக்கும் 23வது படத்தை சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மீனவ இளைஞனாக நாகசைதன்யா நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக ஆந்திர மாநிலம் காகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்றிருந்த அவர், அங்குள்ள மீனவர்களுடன் பேசினார். அவரது ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஏற்கனவே அவர்கள் ‘லவ் ஸ்டோரி’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

 

The post மீனவர் கதையில் சாய் பல்லவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: