பிரபுதேவா ஜோடியாக அஞ்சு

பிரபுதேவா நடிக்கும் 60வது படம், ‘வுல்ஃப்’. ராய் லட்சுமி, அனுசுயா பரத்வாஜ், வசிஷ்ட சிம்ஹா, ஆர்ஜே ரமேஷ் ஆகியோருடன் பிரபுதேவா ஜோடியாக அஞ்சு குரியன் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார். ராய் லட்சுமி நடிப்பில் வெளியான ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கியிருந்த வினு வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஹீரோவும், வில்லனும் ஓநாயின் குணம் கொண்டிருப்பார்கள்.

எந்த ஓநாய் வெற்றிபெறுகிறது என்பது கதை. 600 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் இருந்து தற்காலம் வரை பயணிக்கும் அறிவியல் புனைக்கதையான இது, திகிலுடன் கூடிய சஸ்பென்ஸ் நிறைந்த படமாகும். 600 வருட கதையில் இளவரசன் கேரக்டரில் வினு வெங்கடேஷ் நடித்துள்ளார். இவர், இயக்குனர் எஸ்.ஜேசூர்யாவின் உதவியாளராகப் பணியாற்றியவர். தவிர, அம்ரேஷ் கணேஷ் இசையில் வுல்ஃப் படத்துக்காக விஜய் சேதுபதி ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

The post பிரபுதேவா ஜோடியாக அஞ்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: