கிரைம் திரில்லரில் சுனைனா

‘லத்தி’ படத்திற்கு பிறகு சுனைனா நடித்துள்ள படம் ‘ரெஜினா’. டோமின் டிசில்வா எழுதி இயக்கிய கிரைம் திரில்லர். நிவாஸ் ஆதித்தன், குத்துச்சண்டை வீரர் தீனா, அனந்த் நாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டி இருந்தது.

நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப்பட்டது. ‘ஒரு படம் உருவாவது பலரின் உழைப்பில். அதில் எனக்கான பங்கை நான் செய்தேன். இதில் பெருமைபட்டுக்கொள்ள எதுவும் இல்லை’ என்கிறார் சுனைனா.

The post கிரைம் திரில்லரில் சுனைனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: