இந்திய-அமெரிக்க உறவு பல சவால்களை கடந்தது: இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

புதுடெல்லி: இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவும், அமெரிக்காவும் பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் வலுவான மக்களுக்கு இடையேயான உறவுகளில் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. இருநாட்டு உறவு பல மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இரு நாடுகளும் உறுதியளித்துள்ள கணிசமான நிகழ்ச்சி நிரலில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

மேலும் இருநாடுகளின் உறவும் தொடர்ந்து முன்னேறும் என்று நம்புகிறோம். இரு நாடுகளும் வலுவான பாதுகாப்பு கூட்டாண்மையை கொண்டுள்ளன. இது கடந்த பல ஆண்டுகளாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மேலும் வளருவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் தேசிய நலனால் இயக்கப்படுகின்றது. நமது எரிசக்தி தேவைகளை பாதுகாப்பதில் சந்தைகளில் என்ன வழங்கப்படுகின்றது என்பதாலும், நிலவும் உலகளாவிய சூழ்நிலைகளாலும் வழிநடத்தப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.

The post இந்திய-அமெரிக்க உறவு பல சவால்களை கடந்தது: இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: