கடலூர்: விருத்தாசலத்தில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு வந்ததால் பேருந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு வந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.