விபத்தில் இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்ட ஈடு

கடலூர்: விபத்தில் இறந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைநாயகபுரம் கீழமூங்கிலடியை சேர்ந்தவர் செல்வம். சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி காரில் மனைவி ஸ்ரீதேவி பிரியா, மகள் ஜனனிஸ்ரீ ஆகியோரை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலம் – பண்ணாரி மெயின் ரோட்டில் புது வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இறந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வத்தின் தாய் சகுந்தலா மற்றும் தந்தை முத்துசாமி ஆகியோர் நஷ்ட ஈடு கேட்டு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1ல் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த எஸ்.ஐ.க்கு குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடி 40 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி ஆனந்தன் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

The post விபத்தில் இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்ட ஈடு appeared first on Dinakaran.

Related Stories: