சென்னை: இன்று புனித வெள்ளி நிகழ்வையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடு நடக்கிறது. கிறிஸ்தவர்களின் தவக் காலத்தின் முக்கிய வாரமாக இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து பாடு அனுபவிக்கிற புனித வாரத்தின் முக்கிய நாளான நேற்று புனித வியாழன் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து தயாரான நிலையில் தனது 12 சீடர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு அன்பு குறித்து போதித்தார். பின்னர் சீடர்களின் கால்களை அவர் கழுவி முத்தமிடுவார். மறுநாள் வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து தனது சீடர் யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் இன்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடைபெறும். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க தினமாக அனுசரிப்பார்கள். சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு திருப்பலியும், கத்தோலிக்க ஆலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடைபெறும்.
The post புனித வெள்ளி இன்று அனுசரிப்பு appeared first on Dinakaran.