சென்னை அரும்பாக்கத்தில் திமுக கூட்டணி சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் பேசுகையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தினோம். அன்று சிலிண்டர் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். பின்னர் விறகு அடுப்பில் வைத்து தான் கஞ்சி செய்தோம். நிறைய மண்டபங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள அனைவரும் எனக்கு நண்பர்கள் என பொய் தம்பட்டத்தை பிரதமர் மோடி அடித்து கொள்கிறார். கச்சா எண்ணெய் 6 மாதத்திற்கு இருப்பு வைத்து இருக்க வேண்டும். ஆனால் இருப்பு இல்லை. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக இந்த தேர்தலில் வாஷ்அவுட் ஆகும். சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என எடப்பாடி கூறுகிறார். உங்களை விட எடப்பாடி பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருடன் 8 ஆண்டுகள் பயணித்து இருக்கிறேன். அவர் சொல்வதை பெருசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.
