சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் வட்டங்களில் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
