* இந்த 2 அணிகளும் இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன.
* அவற்றில் மும்பை 13, ஐதராபாத் 10 போட்டிகளில் வெற்றி வாகை சூடி இருக்கின்றன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ஐதராபாத் 277, மும்பை 246 ரன் விளாசி இருக்கின்றன. இதில் ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் எடுத்த 277 ரன் (2024) ஐபிஎல் வரலாற்றி்ல 3வது அதிகபட்ச ரன்னாகும்.
* குறைந்த பட்சமாக ஐதராபாத் 96, மும்பை 87 ரன் சேர்த்துள்ளன.
* இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி 5 ஆட்டங்களில் மும்பை 3 ஆட்டங்களிலும், ஐதராபாத் 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* மற்ற அணிகளுடன் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய தலா 5 ஆ ட்டங்களில் மும்பை 2-3 என்ற கணக்கிலும், ஐதராபாத் 1-4 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை வசப்படுத்தி இருக்கின்றன.
* இரு அணிகளும் கடைசியாக வி ளையாடிய போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
* நடப்புத் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடிய 2 ஆட்டங்களிலும் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
* அதேபோல் ஐதராபாத் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 2 ஆட்டங்களில் மட்டும் வெற்றி வாகை சூடியுள்ளது.
* இந்த 2 அணிகளுக்கும் இது 7வது லீக் ஆட்டமாகும்.
* மும்பை வான்கடே கிரிக்கெட் அரங்கில் இவ்விரண்டு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 6, டெல்லி 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.
The post ஐபிஎல் 33வது போட்டியில் சன்ரைசர்ஸ் சரவெடி மும்பையில் தொடருமா? appeared first on Dinakaran.