ஈஸ்டர் திருவிழாவின் முன்னோட்டமாக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நடக்கிறது

சென்னை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி 5 வாரங்கள் முடிவடந்த நிலையில் இன்று குருத்தோலை ஞாயிறு வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் நுழையும்போது அவருக்கு மக்கள் கொடுத்த ஆரவார வரவேற்பு நிகழ்ச்சிதான் இந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வரும்போது அவருக்கு குருத்தோலைகளை விரித்து யூத மக்கள் வரவேற்பு அளித்தனர். கைகளில் ஒலிவ மரத்தின் இலைகளை வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை நினைவு கூறும் வகையில் தவக்காலத்தின் 6வது ஞாயிற்று கிழமையை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடை பிடிக்கிறார்கள். இதையடுத்து, இன்று காலை அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக வருவார்கள். அப்போது, தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று வாழ்த்து பாடல்களை பாடுவார்கள். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் காலை 7 மணி முதல் தொடங்கும். இயேசு உயிர்த்த நாளின் வருகையை வெளிக்காட்டும் நிகழ்வாக இந்த குருத்தோலை பவனி கடைபிடிக்கப்படுகிறது.

The post ஈஸ்டர் திருவிழாவின் முன்னோட்டமாக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: