மசோதாக்களை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு காலக்கெடு கூட்டாட்சிக்கு நல்லது: சொல்கிறார் கபில் சிபல்

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கபில் சிபல் அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உள்ளது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி உள்ளனர். அவர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பார்கள். இதனால் எந்த திட்டமும் நடைமுறைக்கு வராது. இந்த நிகழ்வுகள் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்து வருகிறது. எனவே இது அரசியல் ரீதியானது. கூட்டாட்சிக்கு எதிரானது. இப்போது உச்ச நீதிமன்றம் மசோதாவை திருப்பி அனுப்ப 3 மாத காலக்கெடுவை விதித்துள்ளது. குடியரசுத் தலைவரும் காலக்கெடுவை பின்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பு கூட்டாட்சிக்கு நல்லது’’ என்றார்.

The post மசோதாக்களை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு காலக்கெடு கூட்டாட்சிக்கு நல்லது: சொல்கிறார் கபில் சிபல் appeared first on Dinakaran.

Related Stories: