கரூர், ஏப். 11: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் டிப்ளமோ பயிற்சியளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில கையாள் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழஙகுடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆணடு வருமானம் ரு. 3லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள். மேலும், சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுககு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியைப்பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் டிப்ளமோ பயிற்சி: 12ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.