கரூர், ஏப். 9: கருர் மாவட்டம் விசுவநாதபுரி அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பெரியாண்டாங்கோயில பகுதியில இருந்து விசுவநாதபுரி செல்லும் சாலையோரம் கடந் சில ஆண்டுகளுககு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தரப்பட்டது. சில மாதங்கள் இவை பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், இந்த சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, இதனை புதுப்பித்து இந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏறபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, திரும்பவும் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கருர் விசுவநாதபுரி அருகே மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் appeared first on Dinakaran.