ஏப்.5ம் தேதி நடக்கிறது: கரூர் மின்பகிர்மான வட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர், ஏப்.3: கரூர் மின்பகிர்மான வட்ட த்தில் மின் குறைதீர்க்கும் கூட்டம் 5ம் தேதி நடைபெறுகிறது,. கரூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மின்பகிர்மான வட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து செயற்பொறியாளர் அலுவலகங்களில் ஏப்ரல் 5ம் தேதி அன்று மின் கணக்கீடு, சராசரி மின் கட்டணம் சார்ந்த குறைகள் மற்றும் இதர மின்சார சேவை தொடர்பான குறைகள் குறித்து, சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் தலைமையில் கோட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது.

அதன்படி, ஏப்ரல் 5ம்தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, கரூர் செயற்பொறியாளர் அலுவலகம், குளித்தலை செயற்பொறியாளர் அலுவலகம், கிராமியம், கரூர் செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏப்.5ம் தேதி நடக்கிறது: கரூர் மின்பகிர்மான வட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: