கரூர் ஐந்துரோடு சாலையில் நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள்

கரூர், ஏப்.10: கரூர் ஐந்து ரோடு அருகே அதிகளவு செல்லும் கனரக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கரூர் நகரப்பகுதியில் இருந்து வாங்கல், புலியூர், பசுபதிபாளையம், மோகனுர், நெரூர், சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சர்ச் கார்னர், புதுத்தெரு வழியாக ஐந்து ரோடு பகுதியை கடந்து பல்வேறு பகுதிகளை நோக்கிச் செல்கிறது.

இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் ஐந்து ரோடு வழியாகவே சென்று வருகிறது. இந்நிலையில், ஐந்து ரோடு அருகே கரூர் நகரம், வாங்கல், பசுபதிபாளையம் என மூன்று வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதி வழியாக கனரக வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கரூர் ஐந்து ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரூர் ஐந்துரோடு சாலையில் நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: