டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கரூர், ஏப். 9: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அறிவிப்பு ஏப்ரல் 1ம்தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு ஜூன் 15ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கருர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறப்பாக பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் காற்றோட்டமான அறை, குடிநீர் வசதி, ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கியை நூலக வசி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, தினமும் சிறு தேர்வுகள், மென் பாடக் குறிப்புகள் எடுததுக் கொள்ள இணையத்துடன் கூடிய கணினி உள்ளிட்ட வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருவாய்த்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பயிற்சி பிரிவு, மருத்துவத்துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வினை சிறந்த முறையில எழுதி வெற்றி பெற வழி வகுக்கும் வகையில், மாதிரித் தேர்வுகள் ஒவ்வொரு புதன்கிழமையும், வாரத் தேர்வுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் உடனடியாக கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிடையாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.,

இந்த வாய்ப்பினை டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: