கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி; ஆரம்ப சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை முகாம்

கரூர், ஏப். 10: அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் 101 நலவாழ்வு மையங்களில் புற்றுநோய் பரிசோதனை முகாம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது, கருப்பை வாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கும் திட்டம் தமிழக முதல்வரால் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில், கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 101 நலவாழ்வு மையங்களில் பணியாற்றும் பயிற்சி பெற்ற இடைநிலை சுகாதார செவிலியர்கள் (எம்எல்எச்பி) மற்றும் சுகாதார செவிலியர்கள் (ஸ்டாப் நர்ஸ்) பரிசோதனைகள் மேற்கொண்டு, அவர்களில் சிகிச்சை தேவைப்படும் நபர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுவார்கள்.

மேலும், பெண் சுகாதார தன்னார்வலர்கள், அவர்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு சென்று 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த திட்டத்தின் நோக்கம் குறித்த அழைப்பிதழ் கொடுத்து அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 101 நலவாழ்வு மையங்களுக்கு வரவேற்பார்கள். இதனை கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் 30 வயதுடைய பெண்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி; ஆரம்ப சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: