கருர், ஏப். 9: சட்ட திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு பல்கலை சட்ட திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, தமிழகம் முழுதும் நேற்று மதியம் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதே போல், கருர் மாவட்ட திமுக சார்பில் கருர் பேரூந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், மத்திய நகரச் செயலாளர் கனகராஜ், மேயர் கவிதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, ரமேஷ்பாபு மற்றும் ராஜா, சுப்பிரமணியன், காலனி செந்தில், பிரபு உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
The post சட்டதிருத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் appeared first on Dinakaran.