கரூர், ஏப். 11: மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரகம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2013ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஏப்ரல் 12ம்தேதி காலை 10மணி முதல் 1 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இந்த கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை நடக்கிறது மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.