கரூர், ஏப். 4: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,இ கருர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையுடன் இணைந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் காவல்துறையினரின் பங்கு குறித்து ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில், பேராசிரியர்கள் சூரியன் ஜோசப், இளங்கோவன், முதல்வரின் பசுமை தோழர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி கறித்து பேசினர். இந்த நிகழ்வில், ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி வெங்கடாச்சலம், ஆயுதப்படை மற்றும் காவலர்கள் என 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியில் காவலர்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காவல்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கார்பன் குறைப்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வாழ்வியல் முறைகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குற்ற அதிகரிப்பு போன்ற தலைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட காவலர்களுக்கு மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில் மீண்டும் துணிப்பை நிகழ்வின் ஒரு பகுதியாக அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.
The post திரளான பக்தர்கள் பங்கேற்பு; கரூர் எஸ்பி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் குறித்து ஒருநாள் பயிற்சி appeared first on Dinakaran.