அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மொத்தம் 12,547 நன்கொடைகளில் இருந்து ரூ.2,544.28 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. நன்கொடைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 199 சதவீதம் அதிகம். இதில் பாஜவுக்கு 88 சதவீதம் அதாவது ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு 1,994 நன்கொடைகள் மூலம் ரூ.281.48 கோடி கிடைத்துள்ளது. இதில், 3,755 நன்கொடைகள் (88 சதவீதம்) கார்ப்பரேட் அல்லது தொழில் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2,262.55 கோடி.
மீதமுள்ள 8,493 நன்கொடைகள் (10.64 சதவீதம்) தனியார் மூலம் வழங்கப்பட்டவை. இதன் மதிப்பு ரூ.270.872 கோடி. இதில் 3,478 நன்கொடைகள் மூலம் பாஜவுக்கு ரூ.2,064.58 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4,628 தனியார் நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.169.126 கோடி கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு கார்ப்பரேட்களிடம் இருந்து 102 நன்கொடைகள் மூலம் ரூ.190.3263 கோடி கிடைத்துள்ளது. 1,882 தனியார் நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.90.899 கோடி கிடைத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜ பெற்ற ரூ.2.064.58 கோடியானது மற்ற தேசிய கட்சிகள் பெற்ற மொத்த தொகையை விட 9 மடங்கு அதிகம்.
அதிகபட்சமாக ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை நிறுவனம் மொத்தம் ரூ.880 கோடியை நன்கொடையாக தந்துள்ளது. இந்நிறுவனம் 31 நன்கொடைகள் மூலம் பாஜவுக்கு ரூ.723.675 கோடியும், காங்கிரசுக்கு ரூ.156.4025 கோடியும் வழங்கி உள்ளது. ட்ரையம்ப் தேர்தல் அறக்கட்டளை நிறுவனம் 4 நன்கொடைகள் மூலம் பாஜவுக்கு ரூ.127.50 கோடியும், டிரைவ் முதலீட்டு நிறுவனம் ரூ.50 கோடியும் வழங்கி உள்ளது. டிரைவ் முதலீட்டு நிறுவனம் காங்கிரசுக்கு ரூ.3.20 கோடி வழங்கி உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் ஒரே நன்கொடையில் பாஜவுக்கு ரூ.50 கோடி வழங்கி உள்ளது. இதே போல, ரங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரே நன்கொடையில் பாஜவுக்கு ரூ.50 கோடி வழங்கி உள்ளது.
The post 2023-24ம் நிதியாண்டில் ரூ.2,243 கோடி நன்கொடையுடன் தேசிய கட்சிகளில் பாஜ முதலிடம்: கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் appeared first on Dinakaran.