இதற்கு, பல்வேறு சமூக உரிமை ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். பொது நலனையோ அல்லது வேறு விதிவிலக்கையோ கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட தகவல்களை அரசுத் துறைகள் மறைக்க உதவும் தனிநபா் தரவு பாதுகாப்பு சட்டப் பிரிவு 44(3)-ஐ ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.இதை வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் 130 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கூட்டுத் தீா்மானம் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் சமா்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், இன்று (11.04.2025) ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக, காங், உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 130 எம்.பி.க்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தி அதை மிகவும் மோசமாக வலுவிழக்க வைக்கும் செயலை கைவிட வேண்டும். மக்களின் தகவல் அறியும் உரிமை பறிக்கப்படாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
The post தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தி அதை மிகவும் மோசமாக வலுவிழக்க வைக்கும் செயலை கைவிட வேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடிதம் appeared first on Dinakaran.