சென்னை சினிமா ஸ்டண்ட் கலைஞரிடம் கஞ்சா பறிமுதல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் மலையாளப் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த அறைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான மகேஸ்வரன் என்பவர் தங்கியிருந்த அறையில் ஒரு ஆங்கில அகராதி கண்டுபிடிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது அது அகராதி அல்ல என்றும், அது ஒரு பெட்டி என்றும் தெரியவந்தது. அதனுள் 16 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவை கைப்பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

The post சென்னை சினிமா ஸ்டண்ட் கலைஞரிடம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: