எம்எல்ஏவின் உறவினர் சுட்டுக்கொலை

ககாரியா: பீகாரில் ககாரியா மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏ பன்னா லால் சிங் படேல். இவரது உறவினர் கவுஷல் சிங். இவர் நேற்று முன்தினம் இரவு சவுதம் நகரில் உள்ள கைதிடோலா பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் கவுஷல் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.  உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எம்எல்ஏவின் உறவினர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: