தங்கம் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு ரூ.68,480க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை கடந்த 26ம் தேதியில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.68,080க்கும் விற்பனையானது. இந்த விலை இதற்கு முன்னர் இருந்த அனைத்து அதிகப்பட்ச விலையையும் முறியடித்து புதிய உச்சத்தை கண்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது.

அதாவது கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,560க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.68,480க்கு விற்பனையானது. அதே நேரத்தில் இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் கண்டது. இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி இன்று (நேற்று) முதல் அமலுக்கு வந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது தங்களுடைய கவனத்தை திருப்பி வருகின்றனர். இதுவே விலை ஏற்றத்துக்கு காரணம்” என்றனர்.

The post தங்கம் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு ரூ.68,480க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: