மும்பை: அமெரிக்க அதிபரின் அதிரடி வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் பெரும் சரிவு சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,138 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியபோது 3,940 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ் படிப்படியாக மீண்டது. வர்த்தக நேரம் முடிவில் 1,700 புள்ளிகள் மீட்சி பெற்று 2,227 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 743 புள்ளிகள் சரிந்து 22,162 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. வர்த்தகம் தொடங்கியபோது 1,160 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 21,744 புள்ளிகளாகச் சரிந்திருந்தது. எனினும் வர்த்தக நேரம் முடியும்போது 400 புள்ளிகள் வரை மீட்சி பெற்று நிஃப்டி 743 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!! appeared first on Dinakaran.