டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு மேலும் ரூ.2 உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5% சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெயும் 4.39% விலை குறைந்து 62.7 டாலருக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரி லிட்டருக்கு மேலும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வரி விதிப்பால், பொதுமக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பலன் பறிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான ரூ.2 கலால் வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விலைவாசி குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை நிதியமைச்சகம் ரூ.2 உயர்த்திய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
The post பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: நாளை முதல் அமல் appeared first on Dinakaran.