மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்த நிலையில் தற்போது 2,500 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2599 புள்ளிகள் சரிந்து 72821 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்த நிலையில் தற்போது 800 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 841 புள்ளிகள் சரிந்து 22062 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
The post டிரம்ப் வரி விதிப்பு: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 2500 புள்ளிகள் வீழ்ச்சி appeared first on Dinakaran.