அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி

மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் சரிந்து 72757 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1000 புள்ளிகள் சரிந்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1016 புள்ளிகள் சரிந்து 21887 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஹாங்காங் பங்குச்சந்தை 8.7%, சிங்கப்பூர் 7%, ஜப்பான் 6%, சீனா 5.5%, மலேசிய பங்குச்சந்தை 4.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 4.1%, பிலிப்பைன்ஸ் 4%, நியூசிலாந்து பங்குச்சந்தை 3.6% சரிவை சந்தித்து வருகின்றது.

The post அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: